Monday, July 6, 2009

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட !!

பாடியவர்கள்: இசைஞானி மற்றும் ஜானகி அம்மா

இந்த அழகான,கேட்போரின மனதை மயக்கும் இந்த பாடலை நான் இப்பொழுது இந்த பக்கத்தில் எழுதுவதற்கு காரணம் ஒரு பெண் தான்!!!அவளை நான் பார்த்த தருணத்திலே இந்த பாடல் தான் என் மனதிலே பின்னணி இசையாக ஒலித்தது (ஒரு வேளை திருமணமாகி இருக்குமோ!! ஏனென்றால் மெட்டி ஒலி அல்லவா என் நெஞ்சை தாலாட்டுகிறது!!)சரி அது ஒரு புறம் இருக்கட்டும் !!!!

இசைஞானியின் இசை மாலைகளுள் இந்த மாலைக்கு எப்போதும ஒரு தனி இடம் உண்டு என்றால் அதை யாரும் மறுப்பதற்கு இல்லை..அதற்கு காரணம் இந்த பாடலின் இசை அமைப்பு மற்றும் இசைஞானியும் ஜானகி அம்மாவும் பாடிய விதம் (என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை!)மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலினால் நான் பெற்ற இன்பத்தை!!

பாடலின் துவக்கத்தில் ஜானகி அம்மா பாட அதனோடு சேர்ந்து இசைஞானி பாடும் விதமும் (பூமாலையே தோள் சேரவா !!பாடலை போல )அலை ஓசையுடன் கூடிய மற்ற இசை வாத்தியங்களின் இசையும் மனதை வருடும் விதமாக அமைத்திருப்பது இந்த பாடலின் தனிச்சிறப்பு !!!
அதிலும் பல்லவியை அடுத்து வரும் தனி வயலின் இசை இசைஞானியால் மட்டுமே நிகழ்த்த முடிகின்ற அற்புதம் (இசை கடவுள் என்று இதற்குத்தான் சொல்லுகின்றோம்!!) மேலும் இந்த பாடலில் கிடார் மற்றும் புல்லாங்குழல் முக்கியமான பங்கு வகித்திருக்கும்...

மொத்தத்தில் இந்த பாடல் கேடகும் ஒவ்வொருவரின் மனதையும் வருடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது..

ஆனால் இந்த பாடலை திரையுலக ஜாம்பவான் மகேந்திரன் படமாக்கியிருக்கும் விதம் நன்றாக இருந்தாலும் பாடலும் இந்த பாடல வரிகளும் இந்த காட்சி அமைப்புக்கும் பொருத்தமானதாக இல்லையோ என்ற ஒரு வித ஐயம் ஏற்படும் ...அதற்கு காரணம் ஒரு ஆணும் பெண்ணும் பாடும் பாடலை மூன்று பெண்களை வைத்து படமாக்கி இருப்பார் அவர்.அதிலும் இரண்டாவது சரணத்தில் பெண்முல்லையே என்று இசைஞானி பாடும்போது பின்னணியில் கேட்கும் ஜானகி அம்மாவின் விரகதாப (ஹா..........) குரல் இந்த பாடலின் காட்சி அமைப்பு இப்படி இருக்க கூடாது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும்.

என்னை பொறுத்தவரை இந்த பாடலை அந்திமழை பொழிகிறது பாடலுக்கு காட்சி அமைத்ததை போல அமைத்திருக்க வேண்டும் அல்லது காதலர்கள் அவர்களுடைய எண்ணங்களை பரிமாறிக்கொண்டு நடந்து போவது போல் காட்சி அமைத்திருந்தால் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம் (கருத்துக்களும் எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கும் ஆகவே நான் மகேந்திரன் அவர்களின் காட்சியமைப்பை தவறாக சொல்வதாக எண்ணி கொள்ள வேண்டாம் அதற்கு எனக்கு தகுதி இல்லை என்பதை நானறிவேன்!!)


இசைஞானியே!!!
கடவுள் என் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று
கேட்டால் நான் கேட்கும் வரம் என்னவென்றால்!!
வாழ் நாளெல்லாம் உம இசையோடு வாழ்ந்தாலே போதும்!!!
நான் இம்மையை விட்டு மறுமைக்கு சென்றாலும்,
இது போன்ற உம பாடல்கள் என் காதில் ஒலித்து கொண்டே
இருக்க வேண்டும் என்று கேட்பேன்!!

ராஜா சரணம்!!
இசைஞானியின் தாசன் எஸ்.தேவிந்த்

என்னை மயக்கிய இந்த பாடல் இதோ உங்களுக்காக !!

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 2, 2009

காதல் உன் லீலையா !!!!!

பாடியவர் : இசைஞானி
படம் : ஜப்பானில் கல்யாண ராமன்

திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசர் நடித்த ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்திற்காக ஒலிதகட்டில் மட்டுமே வந்து திரைப்படத்தில் காட்சியாக்கபடாததால் அநேகபேரை சென்றடையாமல் போன இசைஞானியின் மற்றுமொரு அருமையான பாடல் தான் "காதல் உன் லீலையா இளம் காமன் உன் வேலையா ".

கேட்போரின் மனதை மயக்கும் இந்த பாடலை எனக்கு அறிமுகபடுதியவர் அன்புக்குரிய சகோதரர் அலெக்ஸ் அவர்கள் இந்த பாடலை நான் முதல்முறை கேட்டவுடனே இந்த பாடல் என் மனதில் பதிந்து விட்டது! அதற்கு காரணம் எனக்கும் காதலித்த அல்லது காதலிக்கும் (நான் இசைஞானியின் இசையை பற்றி சொல்கிறேன், வேறேதும் நினைத்து கொள்ளவேண்டாம்) அனுபவம் இருப்பதாலோ என்னவோ!!!

இந்த பாடலின் சிறப்பம்சங்களில் ஓன்று எளிமையான இசைக்கோர்வை !!
தேவையற்ற ஒலிகள் எழுப்பாமல் (சமீபத்திய ஒலியமைப்பாளர்கள் போல் மன்னிக்கவும் இசை அமைப்பாளர்களை போல்) பாடலுக்கு என்ன தேவையோ அந்தந்த வாத்தியங்களின் ஓலியை சரியான அளவில் எப்பொழுதும் போல உபயோகித்திருப்பார் இந்த பாடலில் இசைஞானி.


இந்த பாடலை நான் திரும்ப திரும்ப கேட்கும் போது மூன்று வெவ்வேறு காட்சி அமைப்புகள் என் மனதிலே தோன்றியது (ஏனென்றால் இந்த பாடல் திரைப்படத்தில் காட்சியாக்க படவில்லை என்பதால் )

காட்சி 1:
இந்த பாடலில் காதலனும் காதலியும் பிரிந்த பிறகு பாடல் வரிகளை அவர்களின் உதடுகள் உச்சரிக்காமல் கடந்த கால காதல் நினைவுகளை நினைத்துப்பார்த்து உருகுவது போலவோ ..

காட்சி 2:
காதலே வேண்டாமென்று இருக்கும் இருவருக்குள் காதல் புதிதாக குடிபுகுந்திருக்கும் அந்த ஒருவித சொல்லமுடியாத மகிழ்ச்சி கலந்த தவிப்பை விளக்கும் பாடலாகவோ...

காட்சி 3:
இளமை எனும் பூங்காற்று ,என்னுள்ளே என்னுள்ளே பாடல்கள் காட்சியமைப்பை போல காட்சிப்படுதினால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனக்கு..

இப்பொழுது புரிகிறதா இசைஞானியின் இசையின் லீலை..வலைபக்கத்தில் அவருடைய பாடல்களை பற்றி எழுதும் நோக்கத்தோடு வந்த என்னை அவருடைய பாடலுக்கு ஒரு இயக்குனராக காட்சியமைக்கும் ஆசையை தூண்டிவிடுகிறது !!இதுதான் .இசைஞானியின் இசையின் மகத்துவம்..


" இந்த பாடல் உம் லீலையா !! "
" இசைஞானி உம் வேலையா !! "


ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் இசைஞானியின் தாசன் ,
எஸ்.தேவிந்த்

என்னை மயக்கிய பாடல் இதோ உங்களுக்காக!!
===================

Get this widget | Track details | eSnips Social DNA


==============

என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பொத்தானை அழுத்தி உங்களது வாக்கினை பதிவு செய்யுங்கள் ...

நன்றி