இந்த அழகான,கேட்போரின மனதை மயக்கும் இந்த பாடலை நான் இப்பொழுது இந்த பக்கத்தில் எழுதுவதற்கு காரணம் ஒரு பெண் தான்!!!அவளை நான் பார்த்த தருணத்திலே இந்த பாடல் தான் என் மனதிலே பின்னணி இசையாக ஒலித்தது (ஒரு வேளை திருமணமாகி இருக்குமோ!! ஏனென்றால் மெட்டி ஒலி அல்லவா என் நெஞ்சை தாலாட்டுகிறது!!)சரி அது ஒரு புறம் இருக்கட்டும் !!!!
இசைஞானியின் இசை மாலைகளுள் இந்த மாலைக்கு எப்போதும ஒரு தனி இடம் உண்டு என்றால் அதை யாரும் மறுப்பதற்கு இல்லை..அதற்கு காரணம் இந்த பாடலின் இசை அமைப்பு மற்றும் இசைஞானியும் ஜானகி அம்மாவும் பாடிய விதம் (என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை!)மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலினால் நான் பெற்ற இன்பத்தை!!
பாடலின் துவக்கத்தில் ஜானகி அம்மா பாட அதனோடு சேர்ந்து இசைஞானி பாடும் விதமும் (பூமாலையே தோள் சேரவா !!பாடலை போல )அலை ஓசையுடன் கூடிய மற்ற இசை வாத்தியங்களின் இசையும் மனதை வருடும் விதமாக அமைத்திருப்பது இந்த பாடலின் தனிச்சிறப்பு !!!
அதிலும் பல்லவியை அடுத்து வரும் தனி வயலின் இசை இசைஞானியால் மட்டுமே நிகழ்த்த முடிகின்ற அற்புதம் (இசை கடவுள் என்று இதற்குத்தான் சொல்லுகின்றோம்!!) மேலும் இந்த பாடலில் கிடார் மற்றும் புல்லாங்குழல் முக்கியமான பங்கு வகித்திருக்கும்...
மொத்தத்தில் இந்த பாடல் கேடகும் ஒவ்வொருவரின் மனதையும் வருடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது..
ஆனால் இந்த பாடலை திரையுலக ஜாம்பவான் மகேந்திரன் படமாக்கியிருக்கும் விதம் நன்றாக இருந்தாலும் பாடலும் இந்த பாடல வரிகளும் இந்த காட்சி அமைப்புக்கும் பொருத்தமானதாக இல்லையோ என்ற ஒரு வித ஐயம் ஏற்படும் ...அதற்கு காரணம் ஒரு ஆணும் பெண்ணும் பாடும் பாடலை மூன்று பெண்களை வைத்து படமாக்கி இருப்பார் அவர்.அதிலும் இரண்டாவது சரணத்தில் பெண்முல்லையே என்று இசைஞானி பாடும்போது பின்னணியில் கேட்கும் ஜானகி அம்மாவின் விரகதாப (ஹா..........) குரல் இந்த பாடலின் காட்சி அமைப்பு இப்படி இருக்க கூடாது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை இந்த பாடலை அந்திமழை பொழிகிறது பாடலுக்கு காட்சி அமைத்ததை போல அமைத்திருக்க வேண்டும் அல்லது காதலர்கள் அவர்களுடைய எண்ணங்களை பரிமாறிக்கொண்டு நடந்து போவது போல் காட்சி அமைத்திருந்தால் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம் (கருத்துக்களும் எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கும் ஆகவே நான் மகேந்திரன் அவர்களின் காட்சியமைப்பை தவறாக சொல்வதாக எண்ணி கொள்ள வேண்டாம் அதற்கு எனக்கு தகுதி இல்லை என்பதை நானறிவேன்!!)
இசைஞானியே!!!
கடவுள் என் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று
கேட்டால் நான் கேட்கும் வரம் என்னவென்றால்!!
வாழ் நாளெல்லாம் உம இசையோடு வாழ்ந்தாலே போதும்!!!
நான் இம்மையை விட்டு மறுமைக்கு சென்றாலும்,
இது போன்ற உம பாடல்கள் என் காதில் ஒலித்து கொண்டே
இருக்க வேண்டும் என்று கேட்பேன்!!
ராஜா சரணம்!!
இசைஞானியின் தாசன் எஸ்.தேவிந்த்
என்னை மயக்கிய இந்த பாடல் இதோ உங்களுக்காக !!
|