Tuesday, June 30, 2009

ஒரு நாளும் உனை மறவாத !!!!!!!!

பாடியவர் :இசைஞானி
படம் :எஜமான்

இந்த பாடலை பற்றி சொல்வதற்கு எனக்கு ஓராயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது.இந்த பாடலை நான் முதன் முதலாக கேட்டது இசைஞானி ஓர்குட் இணையதள நண்பர் திரு.குமார் அவர்கள் மூலமாகத்தான்.கேட்ட அந்த தருணத்திலே என் கண்களில் நீர் பிரளயம் ஏற்பட்டு விட்டது.அப்போது உணர்ந்தேன் இசைஞானியின் குரலின் உன்னதத்தை...(இதை எழுதும் போதும் கண்ணீர் நிரம்பி நிற்கிறது கண்களில்)...

""ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்..
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்..
விழியோடு இமை போலே விலகாத நிலை எங்கே !!
விழி நீரை அணை போட்டு மொழிகாத்த துணை எங்கே
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே...
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே...
"""

இசைஞானி இந்த பாடல் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து பாடிருப்பார்.ஆனால் அவர் குரலை கேட்ட உடன் எனக்கு வரிகள் மறந்து போய்விட்டது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மட்டும் தான் எனக்கு தெரிந்தது.

இந்த பாடலை தமிழ் மொழி தெரியாத ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுவிட்டு சொல்லிவிடுவார் இந்த பாடல் படத்தில் எப்படி காட்சியாக்கப்பட்டிருக்கும் என்பதை.அதுதான் இசைஞானியின் தனிச்சிறப்பு.

இந்த பாடலில் இசைஞானி பயன்படுத்திய வாத்தியங்களும் சரி பின்பாட்டும் சரி அது இசைஞானிக்கு மட்டுமே தெரிந்த கலை.

குரலில் சோகத்தையும் ஒரு வித நடுக்கத்தையும் வரவழைத்து கொண்டு பாடும் கலை இசைஞானியை போல வேற யாருக்கும் அவ்வளவு சுலபமாக வந்துவிடாது .இசைஞானியை தவிர்த்து பார்த்தால் ஒரு பாடலை உடன்பாட்டுடன் அனுபவித்து பாடும் உணர்ச்சி பூர்வமான பாடகர்கள் மிகச்சிலரே அதில் எஸ்.பி.பி,ஜானகி அம்மா மற்று கே.ஜே அவர்களுக்கு தனி இடம் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை!!

குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவன் யார் ?? மனதை மெல்லிசையால் இழுத்தே வைத்தவன் யார் ?? என்ற வரிகளுக்கு என்னுடைய அகராதியில் பதில்...குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் ராமசுவாமி மற்றும் சின்னதாய் அம்மாள் .மனதை மெல்லிசையால் இழுத்து வைத்தவர் என்றால் அது என் இசைஞானிதான்.

இந்த பாடலை போல பல பாடல்களை எமக்குத்தந்து ..

ஒரு நாளும் உமைமறவாத இனிதான வரத்தையும் ,
உறவாலும் உடல் உயிராலும் உன் இசையை விட்டுப்பிரியாத வரத்தையும்
எமக்களித்த உமக்கு நான் என்ன கைமாறு செய்ய!!


"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பது போல,
எனக்கேற்பட்ட உணர்ச்சிப் பெருக்கெடுப்பு உங்களுக்கும் ஏற்பட
இதோ உங்களுக்காக அந்த பாடல்...

ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்

=====================

Get this widget | Track details | eSnips Social DNA

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா !!!!

பாடியவர் :இசைஞானி
படம் :இதயம்

இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நான் என்னை மறந்து எங்கேயோ போய்விடுகிறேன் அதற்கு காரணம் இந்த பாடலின் இசைகோர்வை மற்றும் இசைஞானியின் குரல்.....

கே.ஜேசுதாஸ் அவர்கள் பாடும் போது கிடைக்காத ஏதோ ஓன்று இசைஞானி பாடும்போது இந்த பாடலில் உணர முடிந்தது எனக்கு..
அதற்கு மேலாக இந்த பாடலின் இசைகோர்வையை என்னென்பேன்!!ஏதேன்பேன் !!சொல்ல வார்த்தைகளே இல்லை.அதை பற்றி விளக்கி கூற எனக்கு அந்தளவுக்கு இசை அறிவு போதாது.
ஆனால் அந்த பாடலின் முழு இன்பத்தை என்னால் அனுபவிக்க முடிகிறது அதற்கு கரணம் நான் இசைஞானியின் இசைக்கு அடிமை என்பதாலோ என்னவோ!!!!

என் உயிரை குடிக்கும் இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.....

ராஜா சரணம்!!!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்

Get this widget | Track details | eSnips Social DNA