நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கெல்லாம் பல விருதுகள் கொடுக்கும் போது இசைஞானி என்ற மேதை மட்டும் ஒதுக்க படுவதன் காரணம் என்ன?? விருதுகள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் இந்த உலகில் இசைஞானிக்கு விருதுகள் அவசியம இல்லை என்ற விவாதம் நீண்ட நாட்களாகவே உண்மையான இசை ரசிகர்களிடையில் நடைபெற்று கொண்டிருக்கிறது .
ஆனால் இதில் விருதுகள் தேவை இல்லை என்பது முழுமனதாக சொல்லப்படும் கருத்து இல்லை என்பதே நிஜம்.
விருதுகள் என்பது மட்டுமே ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம் என்பதாக அர்த்தம் இல்லை,.இருந்த போதிலும் எந்த ஒரு கலைஞனுக்கும் விருதுகள் என்பது அவருடைய பணிக்கு கிடைக்கும் சிறந்த மரியாதை.அதை இசைஞானி போன்ற மேதைகளுக்கு அளிப்பதால் அந்த விருதுகள் இன்னும் சிறப்பை பெரும் என்பதில் எந்த வித மாற்றுகருத்தும் இருக்க முடியாது !!.அப்படி இருக்கையில் இசைஞானிக்கு விருதுகள் கொடுக்காமல் இருப்பதின் பின்னணி இன்றளவும் புரியாத புதிராக உள்ளது ...இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை .... ஒரு துளி கண்ணீர் தான் விடமுடியும் இப்படி நடப்பதை நினைத்து..
இது மட்டுமல்லாத சமீபத்தில் அனைத்து ஊடகங்களிலும் உபயோகிக்கும் ஒரு வார்த்தை " உலக இசை" மிக விரைவில் .
எது உலக இசை ??
ஹங்கேரி நாட்டில் சென்று இசைஞானி "symphony " இசை தொகுத்து நமக்கு வழங்கிய போது அதை உலக இசை என்று கொண்டாடாத இந்த ஊடகங்கள்.சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு முன்னாதாக "உலக இசை இன்னும் சில தினங்களில் " அப்படி என்று விளம்பரம் செய்கிறார்கள் ,சரி அந்த உலக இசையை கேட்டுதான் பார்ப்போமே என்று கேட்டால் ,அதன் தரம் பக்கத்து வீட்டுக்கு கூட எட்டாமல் போகும் இசை .அப்படி பட்ட மோசமான பாடல்களுக்கே அவ்வளவு விளம்பரம் கொடுக்கும் போது நம்ம தலைவரின் இசை எந்த விதத்தில் தரம் குறைந்தது என்று தெரியவில்லை ..
எது உலக இசை லண்டனில் போய் குறுந்தகடு வெளியிட்டால் அதற்கு பெயர் உலக இசையா ??அவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ...
"படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டுமென்றால் இசைஞானியின் இசை வேண்டாம் "
இது சமீபத்தில் பரவலாக பேசப்படும் கருத்து .
கமல்ஹாசரும் இசைஞானியும் இணைவார்களா என்ற கேள்விக்கு இப்பொழுதுள்ள பதில் .....நல்ல இசை வேண்டுமென்றால் இசைஞானி போதும்..ஆனால் வணிக ரீதியாக படம் வெற்றி பெற வேண்டுமென்றால் வேறு இரண்டு இசை அமைபாளர்களுடன் கமல்ஹாசர் கை கோர்க்க வேண்டும் என்கிறாகள்....அப்படி பார்த்தால் இப்போழுதுள்ளவர்களுக்கு உயிரை உருக்கும் இசை வேண்டாம்...செவிகளை பதம் பார்க்கும் இசைதான் வேண்டுமா ??? அதற்கு பெயர்தான் வணிக இசையா?????
இசைஞானி எத்தனை மோசமான படங்களுக்கு தன் இசை மூலம் வணிக வெற்றியை தேடி தந்திருப்பார் என்று பட்டியலிட்டால் இப்படி சொல்லுபவர்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வார்களோ ??
ஒரு உண்மையான மேதைக்கு இந்த வியாபார உலகில் சரியான இடம் தரப்படவில்லை என்னும்போது ரத்த கண்ணீர் வடிகிறது ...
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லி கொள்கின்ற ஓன்று "இசைஞானியை அறியார் இசையை அறியார் "
உலக இசை ரசிகர்களுக்கு ,
என் இசைஞானியின் இந்த பாடலுக்கு இணையாக உங்கள் உலக இசை அமைப்பாளர்கள் ஒரு சிறிய இசை துகளை அமைத்து விட்டால் அதன் பிறகு நான் பாடல் கேட்பதையே நிறுத்தி விடுகிறேன் .
இசையில் தொடங்குதம்மா - ஹே ராம்
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00178.html
நன்றி,
இசைஞானியின் தாசன் ,
எஸ்.தேவிந்த்
Saturday, January 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கடவுளுக்கு விருது கொடுக்கலாமா சகா
ReplyDeleteகடவுளுக்கு தேவை இல்லை என்று கொடுக்காமல் இருந்தால் சரி சகா ....ஆனால் கடவுளுக்கு தகுதியே இல்லை என்று ஒதுக்கினால்(அவர் விருதுக்கான பட்டியலில் இருக்கும் போது ) ??
ReplyDelete