படம் :எஜமான்
இந்த பாடலை பற்றி சொல்வதற்கு எனக்கு ஓராயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது.இந்த பாடலை நான் முதன் முதலாக கேட்டது இசைஞானி ஓர்குட் இணையதள நண்பர் திரு.குமார் அவர்கள் மூலமாகத்தான்.கேட்ட அந்த தருணத்திலே என் கண்களில் நீர் பிரளயம் ஏற்பட்டு விட்டது.அப்போது உணர்ந்தேன் இசைஞானியின் குரலின் உன்னதத்தை...(இதை எழுதும் போதும் கண்ணீர் நிரம்பி நிற்கிறது கண்களில்)...
""ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்..
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்..
விழியோடு இமை போலே விலகாத நிலை எங்கே !!
விழி நீரை அணை போட்டு மொழிகாத்த துணை எங்கே
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே...
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே... """
இசைஞானி இந்த பாடல் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து பாடிருப்பார்.ஆனால் அவர் குரலை கேட்ட உடன் எனக்கு வரிகள் மறந்து போய்விட்டது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மட்டும் தான் எனக்கு தெரிந்தது.
இந்த பாடலை தமிழ் மொழி தெரியாத ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுவிட்டு சொல்லிவிடுவார் இந்த பாடல் படத்தில் எப்படி காட்சியாக்கப்பட்டிருக்கும் என்பதை.அதுதான் இசைஞானியின் தனிச்சிறப்பு.
இந்த பாடலில் இசைஞானி பயன்படுத்திய வாத்தியங்களும் சரி பின்பாட்டும் சரி அது இசைஞானிக்கு மட்டுமே தெரிந்த கலை.
குரலில் சோகத்தையும் ஒரு வித நடுக்கத்தையும் வரவழைத்து கொண்டு பாடும் கலை இசைஞானியை போல வேற யாருக்கும் அவ்வளவு சுலபமாக வந்துவிடாது .இசைஞானியை தவிர்த்து பார்த்தால் ஒரு பாடலை உடன்பாட்டுடன் அனுபவித்து பாடும் உணர்ச்சி பூர்வமான பாடகர்கள் மிகச்சிலரே அதில் எஸ்.பி.பி,ஜானகி அம்மா மற்று கே.ஜே அவர்களுக்கு தனி இடம் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை!!
குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவன் யார் ?? மனதை மெல்லிசையால் இழுத்தே வைத்தவன் யார் ?? என்ற வரிகளுக்கு என்னுடைய அகராதியில் பதில்...குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் ராமசுவாமி மற்றும் சின்னதாய் அம்மாள் .மனதை மெல்லிசையால் இழுத்து வைத்தவர் என்றால் அது என் இசைஞானிதான்.
இந்த பாடலை போல பல பாடல்களை எமக்குத்தந்து ..
ஒரு நாளும் உமைமறவாத இனிதான வரத்தையும் ,
உறவாலும் உடல் உயிராலும் உன் இசையை விட்டுப்பிரியாத வரத்தையும்
எமக்களித்த உமக்கு நான் என்ன கைமாறு செய்ய!!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பது போல,
எனக்கேற்பட்ட உணர்ச்சிப் பெருக்கெடுப்பு உங்களுக்கும் ஏற்பட
இதோ உங்களுக்காக அந்த பாடல்...
ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்
=====================
|
தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், கலக்குங்கள்.
ReplyDelete"ஒளிதரும் சூரியனும்... வால்மீகி" பாடல் பற்றி எழுதுங்கள் தோழரே !
சமீபத்தில் வந்த பாடல்களில் "கருகமணி" - அழகர்மலை, இசைஞானி + பேலா ஷிண்டேயின் குரலில் சூப்பர் மெலடி.
தங்கள் ப்ளாக் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
உங்கள் ப்ளாகை www.tamilish.com 'ப்ளாக் திரட்டியில்' இணைத்திடுங்கள் சகா. ஹிட்ஸ் கூடும்.
நன்றி.
இந்த பாட்டு கேசெட் இல்லை சிடி இல இருக்கான்னு தெரியலை. இந்த மாதிரி பாடல்கள் ராஜாவுக்கு கை வந்த கலை . ஒரே பட்டை சந்தோஷ உணர்வுக்கும் சோக உணர்வுக்கும் உபயோகிக்கும் மாயஜாலம் ராஜாவால் மட்டும் தான் முடியும்.
ReplyDeleteநன்றி இசை தோழர்கள் ஹார்டா மற்றும் ஜானக்ஸ் அவர்களே...
ReplyDeleteகண்டிப்பாக எழுதிகிறேன் சகா ....